DAILY CURRENT AFFAIRS

ஜோசப் பிரீஸ்ட்லி நினைவு தினம்

ஜோசப் பிரீஸ்ட்லி நினைவு தினம்

பிராண வாயு (ஆக்சிஜன்) கண்டுபிடித்தவர் திரு. ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley) ஆவார்.

அவர் 1774ஆம் ஆண்டு ஆக்சிஜன் வாயுவைத் தனித்தனியாக அடையாளம் கண்டார். பின்னர், Swedish விஞ்ஞானி Carl Wilhelm Scheele 1772ஆம் ஆண்டிற்குமேல் ஆக்சிஜனை உருவாக்கியிருந்தாலும், தனது கண்டுபிடிப்பை தாமதமாக வெளியிட்டதால், பெரும்பாலான வரலாற்று நூல்கள் பிரீஸ்ட்லியையே இதற்கான முதன்மையான கண்டுபிடிப்பாளராகக் கருதுகின்றன.

பிரீஸ்ட்லி தனது ஆராய்ச்சியில், மெர்க்யூரிக் ஆக்சைடு (HgO) என்ற வேதிப்பொருளை வெப்பப்படுத்த, அதிலிருந்து வெளிவந்த வாயுவை பரிசோதித்து, அது சாதாரண காற்றில் இருப்பதை விட மூச்சுக்குச் சாதகமாக இருப்பதை கண்டுபிடித்தார். இதுவே இன்று நாம் ஆக்சிஜன் என அழைக்கும் வாயுவாகும்.

ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley, மார்ச் 24, 1733 – பிப்ரவரி 6, 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிஜனை (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபிடித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS