DAILY CURRENT AFFAIRS
ஜம்னாலால் பஜாஜ் நினைவு தினம்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், தொழிலதுறையின் முன்னோடியுமான திரு. ஜம்னாலால் பஜாஜ் அவர்களின் நினைவு தினம் பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
அவர் 1889 நவம்பர் 4 அன்று பிறந்து, 1942 பிப்ரவரி 11 அன்று மறைந்தார். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த அவர், 1920களில் பஜாஜ் குழும நிறுவனங்களை நிறுவி, இந்திய தொழில்துறையில் முக்கிய பங்களிப்பைச் செய்தார்.
அவரது நினைவாக, 1978ஆம் ஆண்டில் ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை நிறுவப்பட்டு, ஆண்டுதோறும் நான்கு பிரிவுகளில் சமூக சேவைக்கான விருதுகளை வழங்குகிறது.
