DAILY CURRENT AFFAIRS
சர்வதேச அறிவியல் பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம்
நோக்கம்:
- STEM துறைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பங்கு பெறுவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.
- பாலின சமத்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
- பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காண வழிவகை செய்யுதல்.
வரலாறு:
2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) இந்த நாளை சர்வதேச அறிவியல் பெண்கள் மற்றும் சிறுமிகள் தினமாக அறிவித்தது.
யுனெஸ்கோ (UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக விவகாரங்கள் துறை (UN-DESA) இந்த தினத்தை முன்னெடுத்து வருகின்றன.
முக்கியத்துவம்:
- உலகளவில், அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கு இன்னும் குறைவாக உள்ளது.
- பெண்கள் STEM துறைகளில் அதிகமாக ஈடுபடுவதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.
- கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாலின சமத்துவத்தை அடைய உதவுகிறது.
