தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 37: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

விளக்கம்:

இறைவன் திருவருளால் நாள்தோறும் குருவாய் இருக்கும் சிவனை வழிபட்டு நிற்கின்றேன். அந்த சிவன் சிவப்பாய் ஏரியும் நெருப்புத்தழல் போன்ற வெளிச்சமுடன் எம்முடன் நிற்கின்றான். வானத்தில் இருளை நீக்கிப் பிரகாசமாய் ஒளிரும் நிலவைப் போல குருவை வணங்கி நிற்பவர்களின் உடலுக்குள் மகிழ்ந்து வந்து அங்கே உயிருக்கு உயிராக நின்று அஞ்ஞான இருளை அகற்றும் பேரொளியாய் இருக்கின்றான்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS