தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 42: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கு
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

விளக்கம்:

சிவபெருமானை அடைக்கலம் புகுந்து துதிப்பவர்கள் பெறத்தக்க பயன் என்னவென்றால் நான்கு திருமுடியுடைய பிரம்மன் படைப்பான மாய உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களானாலும் மூங்கில் போன்ற திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான சிவபெருமான் அவர்களுடன் பொருந்தி இருப்பான்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS