தினம் ஒரு திருமந்திரம்
பாடல் 33: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து
பதிபல ஆயது பண்டிவ் உலகம்
விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
விளக்கம்:
பண்டைய காலத்தில் இருந்து பலவிதமான தெய்வங்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் வணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வரைமுறைகள் விதிமுறைகளை வகுத்தனர். பல விதிமுறைகளை வகுத்தும் பலவிதமான துதிகளையும் தோத்திரங்களையும் இசையோடு பாட வல்லவர்கள் கூட உண்மை என்னவென்று உணராமல் உண்மையான ஞானத்தை அடைய முடியாதவர்கள் நெஞ்சத்தில் அமைதி இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
