DAILY CURRENT AFFAIRS
சுவாமி பிரம்மானந்தர்
பிறந்த தேதி: ஜனவரி 21, 1863
இறந்த தேதி: ஏப்ரல் 10, 1922
சுவாமி பிரம்மானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை காளியிடம், எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கும் பையனை தமக்குத் துணையாக அனுப்பிவைக்கச் சொன்ன பிரார்த்தனைக்குப் பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிகப் புதல்வராக வந்தவர் இவர்.
இவரது தந்தை ஆனந்த மோகன் கோஷ், தாயார் கைலாஷ் காமினி. தாயார் கிருஷ்ண பக்தை என்பதால் இவருக்கு இடைச்சிறுவன் என்ற பொருளில் ’ராக்கால்’ என்ற பெயர் சூட்டினார்.
