DAILY CURRENT AFFAIRS
ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்
ராஷ் பிஹாரி போஸ் (Rashbehari Bose, மே 25, 1886 – ஜனவரி 21, 1945) பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்கு உதவும் பொருட்டு தொடங்கிய கதர் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர். இந்திய தேசியப் படையை நிறுவியவர். ஆசாத் இந்து அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்.
