தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 0 : விநாயகர் காப்பு [விநாயகர் வணக்கம்]

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கம்:

ஐந்து கரங்களைக் கொண்டவனும், யானையை முகமாகக் கொண்டவனும், இளம் பிறை நிலா போன்ற வளைந்த கொம்பைக் கொண்டவனும், குருவாக இருக்கும் இறைவனின் மகனாக இருப்பவனும், அறிவின் முழுஉருவாகவும் இருப்பவனை, எனது தலைமேல் வைத்து அவனது திருவடியை போற்றி வழிபடுகிறேன்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS