தினம் ஒரு திருமந்திரம்
பாடல் 10: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.
விளக்கம்:
சதாசிவமூர்த்தியாகிய தானே இந்த உலகைத் தாங்கிக் கொண்டு ஆகாயமுமாயும் இருக்கின்றான் அவனே சுடுகின்ற அக்கினிச் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். அவனே அருள் பொழியும் சக்தியுமாய் இருக்கின்றான். அவனே விசாலமான மலையாகவும் குளிரச்சியான கடலாகவும், உள்ளான்.
