தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 4 : பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றெனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

விளக்கம்:

அழிந்து போகக்கூடிய அண்டசராசரங்களுக்கும் அதிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உண்மைப் பொருளாகவும், அனைத்திற்கும் ஆரம்பமாகவும் இருக்கும் இறைவனை, மண்ணுலகில் எம்மை வந்து இருக்குமாறு செய்து, மண்ணுலக மாயையிலிருந்து விடுபடும் வழியாக தனது திருவடியையும் எமக்கு அருளிய இறைவனை, இடைவெளியின்றி பகலிலும் இரவிலும் அவன் பாதங்களைப் பணிந்து, அவனைத் துதித்து, எம்முள் இருக்கும் மாயையாகிய இருளை நீக்கி அவனுடைய உண்மைப் பொருளை உணர்ந்து இருந்தோம்.


Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS