தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 16: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

விளக்கம்:

நரம்போடு இருக்கும் கொன்றைப் பூவைச் சூடிக்கொண்டு சுருள் சுருளான சடையை உடையவரும் அழகு நிறைந்து பிரகாசிக்கும் நெற்றியைக் கொண்டிருக்கும் உமாதேவியை தமது இடபாகத்தில் உடையவரும் ஒரு மாசில்லாத தூய்மையானவருமான இறைவனை, மும்மல பற்றுக்கள் இன்னும் நீங்காமல் இருக்கும் அமரர்களும் தேவர்களும் எப்படிக் கூடிக் குலாவுவார்கள்? ஆதலால் இறைவனின் இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS